நாம் திட்டமிட்டு வேண்டுமென்று செய்யும் செயல்களின் வினைப்பயனிலிருந்து தப்ப முடியாது.
நாம் மனதால் விரும்பி, வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யும் செயல்களுக்குக் கரும பலன் உண்டென்றும், அவற்றின் கருமபலனை அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை என்றும் பகவான் புத்தர் கூறியுள்ளார்.
"திட்டமிட்டுச் செய்த கருமங்களின் பலனை அழிக்க முடியாது; கரும பலனிலிருந்து தப்ப முடியாது; அவற்றின் பலனை அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை. இந்த உலக வாழ்விலோ, அல்லது எதிர்கால பிறப்பிலோ அவற்றின் பலனை அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை. திட்டமிட்டுச் செய்த தீய கருமங்களின் துன்பப் பலனை அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை.
திட்டமிட்ட செயல்கள் என்பது, நாம் மனதால் விரும்பி வேண்டுமென்று செய்யும் செயல்களாகும். அதாவது நாம் மனதால் விரும்பி எண்ணும் எண்ணங்களும்,மனதால் விரும்பி பேசும் சொற்களும், மனதால் விரும்பி உடலால் செய்யும் செயல்களும் வேண்டுமென்று திட்டமிட்டுச் செய்யப்படும் செயல்களாகும்.
நாம் மனதால் விரும்பி, திட்டமிட்டுச் செய்யும் செயல்களின் கரும பலன்களிலிருந்து தப்ப முடியாது. என்கிறார் பகவான் புத்தர். அவை நற்செயல்களாயினும், தீய செயல்களாயினும், அதன் பலனை அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை.இப்பிறப்பிலோ அல்லது எதிர்கால பிறப்பிலோ, அவற்றின் பலனைஅனுபவிக்கத்தான் வேண்டும்.
விரும்பி, வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தீய செயலைச் செயபவனுக்கு அப்போது ஒரு லாபமும், இன்பமும் கிடைத்தாலும், பின்னால் இப்பிறப்பிலோஅல்லது எதிர்கால பிறப்புகளிலோ,அதன் துன்பப்பயனை வருந்தி, புலம்பி, அனுபவிக்கத்தான் வேண்டும். விரும்பி, வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு நல்ல செயலைச் செயபவனுக்கு அப்போது ஒரு நஷ்டம் வந்த போதும் ,பின்னால் இப்பிறப்பிலோஅல்லது எதிர்க்கால பிறப்புகளிலோ,அதன் புண்ணியப்பயனை இன்புற்று, மகிழ்வுடன் அனுபவிப்பான்.
வினை பயனிலிருந்து தப்பமுடியாதாகையால், துன்பத்தை விரும்பாதவன், எவரொருவருக்கும் துன்பம் தரும் செயல்களைச் செய்யக்கூடாது என்கிறார் பகவான் புத்தர்.
"எவரொருவர் துன்பப்பட விரும்பவில்லையோ, அவர் தீய செயல்களைச் செய்யக்கூடாது. இரகசியமாகவோ, பலர் அறியவோ, இப்போது நீ தீய செயலைச் செய்தாய் என்றால், பின்னால் அதனிடமிருந்து தப்பிக்க முயன்றாலும், நிச்சயமாக நீ துன்பப்படுவாய்."