மனத்தில் எழும் கொடிய எண்ணங்களால் உந்தப்பட்டு, நலம் தரும் நல்லுபதேசங்களை, ஊயிர்கள் அலட்சியப் படுத்திப் புறக்கணிக்கன்றன!
ஒரு கள்வனைப்போல், மனத்தில் எழும் கொடிய எண்ணங்கள், உயிர்களின் தூய்மையான வளர்ச்சிக்கு இடையூராக இருக்கின்றன.
பிறவிப் பெருங்கடலில் உயிர்களின் அவல நிலையைக் கொஞ்சம் தியானியுங்கள்.
இந்த மனித உடல் என்னும் வீடு, மாதந்தோறும் ஆண்டு தோறும் அழிந்து வருகிறது.
எந்நேரத்திலும் சரிந்து விழக்கூடிய இது வாழ்வதற்கு அபாயகரமானது.
தப்பித்துக் கொள்ளுங்கள்! பாதுகாப்பைத் தேடிக் கொள்ளுங்கள்!
புனித தர்ம உபதேசங்களை வாழ்வில் கடைபிடியுங்கள்!
பாவக் கருமங்கள் செய்வோர் தமக்கும் மரணம் வரும் என்பதைச் சிந்திப்பதில்லை.
நிலையற்ற இந்த உடல் அழிவதற்கு முன், உடலைவிட்டு உயிர் பிரிவதற்கு முன், பாதுகாப்பைத் தேடிக்கொள்ளுங்கள்.
புனித தர்ம உபதேசங்களை வாழ்வில் கடைபிடியுங்கள்!
-மிலர்ப்பா