எவ்வகையான செயல் மனத்தை வருத்தும்?
பாவச் செயல், அதைச் செய்தபின், அதை நினைத்து மனம் வருத்தும்.
பாவம் என்றால் என்ன?
பாவம் என்பது, தன் சுகத்தை நாடி, தன்னைப்போல் சுகத்தை நாடும் பிறருக்குத் தீங்கு செய்தலாகும். தீயவை நமக்குத் துன்பத்தைத் தருவதுபோல், பிறருக்கும் அது துன்பத்தைத் தரும் என்பதை மறந்து, நாம் ஒரு இலாபத்தை நாடி, பிறருக்குத் தீங்கு செய்தோமென்றால், நாம் பாவம் செய்கிறோம்.

இதையே பகவான் புத்தர் இவ்வாறு விளக்கியுள்ளார்.
"இரகசியமாகவோ, பலர் அறியவோ, இப்போது நீ தீய செயலைச் செய்தாய் என்றால், பின்னால் அதனிடமிருந்து தப்ப முயன்றாலும், நிச்சயமாக நீ துன்பப்படுவாய்."
திருவள்ளுவரும் இதையே இவ்வாறு கூறியுள்ளார்.
"நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்"
அதாவது, துன்பம் யாவும் துன்பம் செய்தோரையே நாடும்.
No comments:
Post a Comment