நிரபராதியான ஒருவருக்கு எவன் தீங்கு செய்தாலும்; பாவமற்ற, பரிசுத்தமான ஒருவருக்கு எவன் தீங்கு செய்தாலும்; காற்றுக்கு எதிராகத் தூவிய மண் தூவியவன் மேலே வந்து விழுவதுபோல், அந்த மூடனைப் பாவம் பற்றிக் கொள்கிறது.
தண்டிக்கத் தகாதவர்களையும் குற்றமற்ற நல்லவர்களையும் தண்டித்துத் துன்பப் படுத்துவோர் பின் கூறப்பட்டிருக்கும் பத்து நிலைகளில் ஒன்றை அடைவார்கள்
1.வேதனை
2.நஸ்டம்
3.உடலில் சேதம்
4.பெரு நோய்கள்
5.சித்தபிரமை
6.அரச தண்டனை
7.பயங்கரமான குற்றச்சாட்டு
8.உறவுகளை இழத்தல்
9.பொருள் அழிவு
10.வீடுகளில் இடி விழும்
நிரபராதியான ஒருவருக்கு எவன் தீங்கு செய்கிறானோ அவன்தான் நரகத்துக்குப் போவான்.
Tuesday, 13 December 2011
தீவினை அச்சம்
"தீவினை" என்பது தீய செயல்கள்.
தீய செயல்கள் என்பது, நான் என்னும் அகந்தையில், தன் நலனப் பெரிதெனக் கருதி, பிறருக்குக் கேடு செய்தல் ஆகும்.
"தீவினை அச்சம்" என்பது தீய செயல்களைக் கண்டு அஞ்ச வேண்டும். ஒருவன் தன் நலனைப் பெரிதெனக் கருதி பிறருக்குக் கேடு செய்தான் என்றால், அச்செயலால் மற்றவருக்குத் துன்பம் வருவதோடுமட்டுமின்றி, இவனுக்கும் அதன் பிற்பயன் துன்பம் தரும். தனக்கும், பிறருக்கும் துன்பம் கொடுப்பதால், தீய செயல்களைக் கண்டு அஞ்ச வேண்டும்.
ஏன் அஞ்ச வேண்டும்?
தீய செயல்கள் இரண்டு உலகத்திலும் துன்பத்தைக் கொடுப்பதால் தீய செயலைக் கண்டு அஞ்ச வேண்டும்.
எப்படி அஞ்ச வேண்டும்?
நெருப்பைவிடக் கொடியது எனக் கருதி அஞ்ச வேண்டும்.
இதனைத்தான் திருவள்ளுவர் இவ்வாறு சொல்கிறார்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
அதாவது, தீய செயல்கள் பெரும் துன்பத்தைக் கொடுப்பதால், தீயச் செயல்கள் நெருப்பினும் கொடியதாகக் கருதி அஞ்ச வேண்டும்.நெருப்பு அதிக பட்சம் இந்த உடலைத்தான் அழித்து மரணத்தைக் கொடுக்கும். நெருப்பு ஒருவனை நரகத்துக்கு அனுப்பாது. ஆனால் தீய செயல்களோ, இங்கு துன்பத்தைக் கொடுத்து, உடலை விட்டு உயிர் பிரிந்தப்பின் நரகத்துக்கு அனுப்பும். ஆகவே, தீய செயல்களைத் தீயினும் கொடியதாகக் கருதி அஞ்சி, பாவங்கள் செய்யாமல் வாழ வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்கின்றார்.
Subscribe to:
Posts (Atom)