திருவள்ளுவர் அறத்துடன் வாழ வேண்டும் என்பதை இவ்வாறு
கூறுகின்றார்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்றால், தலையை மொட்டை அடிப்பதும், தலையில் நீண்ட முடியை வளர்த்துக் கொள்வதும் தேவையில்லை. மனம் மாசுபட்டு, அசுத்தப்பட்டு இருக்கும்போது, எதற்காக வெளிச்சடங்குகள். அதனால் பயனில்லை. உலகம் எதைச் செய்யக்கூடாது என்று சொன்னதோ அதைச் செய்யாதே! அதுபோதும் நீ தெய்வலோகம் போகலாம்; மோட்சத்திற்குப் போகலாம் என்கிறார் திருவள்ளுவர்.
இங்கு உலகம் என்பது சான்றோர்களையும் அறவோர்களையும் குறிக்கும். புத்தர்,வள்ளுவர் போன்ற அறவோர்கள் சொன்ன அறத்தைக் கடைபிடித்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் இன்பம் வரும்; அடுத்த உலகிலும் இன்பம் வரும்.
மனித வாழ்க்கை மிகவும் குறுகியது. இந்த குறுகிய வாழ்க்கையில் நாம் அதிகபட்சம் வாழக்கூடியது ஒரு நூறு ஆண்டுதான். இந்தகுறுகிய வாழ்க்கையில் மக்கள் எதைச் செய்ய வேண்டும்? இக்குறுகிய காலத்தில் மக்கள் செய்ய வேண்டியது அறம்தான் என்று வள்ளுவர் கூறுகின்றார்.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
மனிதர்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டியது அறம்தான். அறம் செய்ய வேண்டும் என்றால் என்ன? அறநெறி அறிந்து, குற்றங்கள் தவிர்த்து வாழ வேண்டும். அறநெறி அறிந்து வாழ வேண்டும் என்றால் என்ன? தர்ம வழியில் காலெடுத்து நடக்க வேண்டும் என்பதை வள்ளுவர் விளக்குகின்றார்.
அறநெறி அறிந்து, குற்றங்கள் தவிர்த்து வாழ வேண்டும். //வள்ளுவரின் வாய்மொழி அருமை..
ReplyDelete