1.ஒருவனிடம் இருக்கும் உயர்ந்த ஆற்றலைக் கண்டுபிடித்து வளர்ப்பது கல்வியே ஆகும்.
2.கற்றவர் என்பவர் கற்றபடி நிற்பவரே.
3.உண்மையைப் புறக்கணித்து வாழ்ந்து வருபவன் மாய்ந்து போனவனுக்கு ஒப்பாகிறான்.
4.உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது.
5.எவன் பிறரது நற்செயல்களைக் கண்டு மகிழ்ச்சி கொள்வதில்லையோ; அவனால் நற்செயல்கள் எதுவும் செய்ய முடியாது.
6. செயல்கள் சிறியதோ பெரியதோ, நம்மால் செய்யக் கூடியவற்றைச் சலிப்பின்றிச் செய்பவரே போற்றுதற்குரியவர்.
7.வெற்றியின் இரகசியம் எடுத்த செயலில் நிலையாக நிற்பதே.
8.உன் உயர்வை உன்னைக் காட்டிலும் உயர்ந்தவனை வைத்து உவமைப்படுத்துவாயாக.
9.பிறர் குற்றம் காண்பதுவும் தன் குற்றம் மறைப்பதுவும், மடைமையின் முழுமையான அடையாளம்.
10.அமையும் வாய்ப்புகளைத் திறம்படப் பயன்படுதுகிறவனே உண்மையான பெருமைக்குரியவன்.
வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய உயர்ந்த கருத்துகள்.பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete