நம் குறைபாடுகளைப் போக்க விரதம் சிறந்த உபாயம்
(துறவி அவர்கள் ஆற்றிய உரையின் பகுதி)
நம் குறைபாடுகள் நம் சுகத்தை கெடுக்கும்; நம் நலனைக் கெடுக்கும்; நம் பெருமையைக் கெடுக்கும்; நம் புகழைக் கெடுக்கும்; நம் மன அமைதியைக் கெடுக்கும்; மனம் சஞ்சலம் உண்டு பண்ணும்; அது நம் உள்ளிருந்தே கொள்ளும் வியாதி.
எவை நம் குறைபாடுகள்?
1. உண்மைக்கு மாறான பேச்சு.
2.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல்.
2.நட்புடையோரிடம் பொய் பேசுதல்; ஏமாற்றுதல்.
3.கடுஞ் சொல் பேசுதல்.
4.பிறர் மனம் புண்படும்படி பேசுதல்.
5.சினம்கொண்டு பேசுதல்; தீங்கு செய்தல்.
6.செய்ய இயலாதவற்றை செய்வேன் என கூறுதல்.
7.வெற்றிபெற வெகுண்டு பெசுதல்.
8.பிறரைப் பழித்துப் பேசுதல்.
9.நல்லோரின் நல்லொழுக்கத்தைப் பரிகாசம் செய்தல்.
10.எளியார் என் பிறரை ஏளனம் செய்தல்.
11.எளிறோரை வருத்துதல்.
12.நட்புக்குரியோரைப் பற்றி பழித்துப் பேசுதல்.
13.பலருக்குமுன் ஒருவரை இகழ்ந்து பேசுதல்.
14.பிறர் செல்வாக்கைக் கண்டு பொறாமைப் படுதல்.
15.பொறாமையால் குற்றமற்றோர்மீது குற்றம் சாட்டுதல்.
16.குற்றம் செய்தும் அது நியாயமானதே என வாதிடுதல்.
17.நம் குற்றத்தை மறைக்க பிறர்மீது பழி சுமத்துதல்.
18.நம் குற்றத்தை மறைத்து நல்லவர்போல் நடித்தல்.
19.தற்பெருமையால் தம்மை உயர்த்தியும் பிறரைத் தாழ்த்தியும் பேசுதல்.
20.நான் எனும் அகந்தையில் பிறரை அலட்சியப் படுத்தி அவமதித்தல்.
21.சண்டை சச்சரவு செய்தல்.
22.வம்பு வளர்த்தல்.
23.வீண்பிடிவாதம் செய்தல்.
24.வஞ்ச மனதுடன் பிறரை ஏமாற்றுதல்.
25.பிறர் பொருள்மீது ஆசை.
26.பொருள் இருந்தும் கொடுக்க மனமில்லை.
27.பகட்டையும் ஆடம்பரத்தையும் கண்டு மயங்குதல்.
28.தீயொழுக்கங்களின் புலன்கள் இன்பம்நாடுதல்.
29.துன்பத்தில் உள்ளோருக்கு உதவாமை.
30.நீதிநெறிகள்,சட்ட விதிகளை அலட்சியம் செய்தல்.
31.வேண்டியவர்,வேண்டாதவர் என பாகுபாடு பார்த்தல்.
32.மதிப்புக் குறிரோதை மதியாமல் இருத்தல்.
33.நல்லோரின் அறிவுரையை அலட்சியம் செய்தல்.
இதுபோன்று இன்று,நேற்று கடந்த காலங்களில் எவ்வளவு தவறுகள் செய்திருப்போம். தீவிர முயற்சி மேற்கொள்ளாததால் மீண்டும் மீண்டும் அதே குறைகளைத் தினம் தினம் செய்து மனநிம்மதி இன்றி வாழ்கிறோம்.
ஏன் இவ்வாறு ஏற்படுகிறது?
நம் எண்ணங்களில் ஒழுக்கமில்லை;அறமிலலை;தூய்மையில்லை;
நம் சொற்களில் ஒழுக்கமில்லை;அறமில்லை;தூய்மையில்லை;
நம் செயல்களில் ஒழுக்கமில்லை;அறமில்லை;தூய்மையில்லை;
இதன் முடிவுதான் என்ன?
சுகம் எங்கே, சுகம் எங்கே என தேடுவோர் நம் சுகத்தை அழிக்கும் பகைவன் நம்மிடமே உள்ளதை அறிந்து நம் குறைபாடுகளை விலக்க வேண்டும். நிம்மதி எங்கே,நிம்மதி எங்கே என தேடுவோர் நம் சுகத்தை அழிக்கும் பகைவன் நம்மிடமே உள்ளதை அறிந்து நம் குறைபாடுகளை விலக்க வேண்டும்.சாந்தி எங்கே, சாந்தி எங்கே என தேடுவோர் நம் சுகத்தை அழிக்கும் பகைவன் நம்மிடமே உள்ளதை அறிந்து நம் குறைபாடுகளை விலக்க வேண்டும்.;
நம் குறைபாடுகள் நம்மிடையே உள்ளன என்பதை ஏற்காதவர்கள் பலர். அவர்கள் உண்மையை அறியாதவர்கள்; ஏற்காதவர்கள்; அறியாமையில் உள்ளவர்கள்.
தமக்கு வரக்கூடிய துன்பங்களுக்கு அவர்கள் கூறும் காரணங்கள் என்ன?
1.பிறந்த நேரம் சரியிலலை.
2.கிரகங்கள் சரியில்லை.
3.எல்லாவற்றிக்கும் காரணம் விதிதான்.
4.மனைவி பிள்ளைகள் சரியில்லை.
5.பெயர் பொருத்தம் சரியில்லை.
6.ஜாதகப் பொருத்தம் சரியில்லை.
7.பிறந்த நேரம் சரியில்லை.
8.பெயர் எண் சரியில்லை.
9.வீட்டின் திசை சரியில்லை.
10.வீட்டின் எண் சரிய்ல்லை.
11.வீட்டின் அமைப்புசரியில்லை.
12.அணியும் ஆடையின் நிறம் பொருத்தமில்லை.
13.மோதிரக்கல் பொருத்தமில்லை.
14.தோஷம் பிடித்துள்ளது.
15.செய்வினை செய்துள்ளார்கள்.
இது போன்ற் காரணங்கள் பல கூறி பரகாரங்கள் தேடுவார்கள்.
நம் உள்ளே இருக்கும் குறைபாடுகளைக் காண மாட்டார்கள்.
நம் குறைபாடுகளை விலக்குவதற்கு விரதம் ஒரு சிறந்த உபாயமாகும். வாழ்வில் சுகமும், நிம்மதியும், சாந்தியும் பெற விரும்புவோர் தம் குறைபாடுகளைத் தேடி,அவற்றை விட்டுவிட வேண்டும்.
மனமாசுகளைப் போக்க விரதம் ஓர் உபாயம். விரதம் சிறந்த பயிற்சி.
No comments:
Post a Comment