Thursday, 28 April 2011

சிந்திக்கச் சில.........


1.குறைபாடுகள்  உடையவ
ன்தான் மனிதன். குறை காண்பனும்  மனிதன்தான். பிறர் குறைகளைத் தேடுபவன் அரை மனிதன். தன் குறைகளைத் தேடுபவன் முழுமனிதன்.

2.பிறர் குறைபாடுகளை நம் கண் முன்னே காண்கிறோம். நம்குறை பாடுகளை மறைக்கின்றோம்.

3.மலர்களில் மணம் கமழுவது போல் நல்வினையால் புகழ் பரவும்.

4.கொடுப்பதால் நாம் செல்வம் பெருகும்; பெற்றுக் கொள்வதால் அன்று.

5.கருத்துடன் காண இரு கண்களூம் கருத்துடன் கேட்க இரு காதுகளும் குறைவாகப் பேச ஒரு நாக்கும் உள்ளன.

6.மிகப் பெரிய வெள்ளமும்  வடியும். மிகப் பெரிய புயலும் அமைதியாகும். எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு.

7.கோபம் ஆறக் கூடியது. வெறுப்பு ஆறாது.வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்.

8.நம்மிக்கை இல்லாத வழிபாடு உயிரற்றது.

9.இரக்க குணம் மனிதனை உருவாக்குகிறது. அரக்க குணம் மனிதனை மிருகமாக்கிறது.

10.நற்செயலுகளுக்கு அடிப்ப்டையே நல்லெண்ணம்தான்.

11.அன்பு  உள்ள இடத்தில் அமைதியும் இன்பமும் இருக்கும்.

12.அன்பும் அறனும் இல்லாதவன் இறந்தவனுக்குச் சமம்.

13.அருட் செல்வத்தைப் பெற்று எல்லா உலகங்களுக்கும் மன்னனாக சீரும் சிறப்புமாக‌ வாழலாமே!

14.தீய எண்ணங்களை அழிக்க  இறைவழிபாட்டைத் துணயாகக் கொள்.

15.சரியான கருத்துகள் மனதில் இருந்தால் நல்ல எண்ணம், இனிமையான சொல், சுகம் தரு
ம் செயல்கள் தோன்றும்.

3 comments:

  1. பெரிய வெள்ளமும் வடியும். மிகப் பெரிய புயலும் அமைதியாகும். எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு.//
    அருமையான வார்த்தைகள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. "அன்பு உள்ள இடத்தில் அமைதியும் இன்பமும் இருக்கும்."......

    அன்பு என்பது தெய்வமானது..!
    அன்பு என்பதே உண்மையானது...!
    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..!
    அன்பின் வழியது உயிர்நிலை...!
    அன்பே சிவம்..!

    ReplyDelete
  3. Live Casino site. LuckyClub.live - Casino Sites
    Live Casino site. Lucky Club. Live Casino site. Lucky Club. Free · Bet. Live Casino · Promotions · Cash Out. B.C. · Casino. Rating: luckyclub 4.2 · ‎Review by Lucky Club

    ReplyDelete